அந்தியூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

அந்தியூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
X

Erode news- அந்தியூர் அரசு மருத்துவமனையில் வெங்கடாசலம் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களின் கேட்டறிந்த போது எடுத்தப் படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ இன்று (20ம் தேதி) திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Erode news, Erode news today- அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ இன்று (20ம் தேதி) திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (20ம் தேதி) வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, மருத்துவமனையில் புறநோயாளிகளின் எண்ணிக்கை, உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும், மருத்துவமனைக்கான தேவைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


இதனையடுத்து , அந்தியூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil