அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆய்வு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையை எம்எல்ஏ வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (15ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணை 130.600 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டி, அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில், அணையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுடன் இன்று (15ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அளவையும், அணையில் செயல்படுத்தி வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளா் கிருபாகரன் மற்றும் அலுவலா்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, அந்தியூர் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் அய்யாசாமி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu