சென்னிமலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன்

சென்னிமலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன்
X

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் வழங்கிய நபர்களுக்கு மனுக்களின் மீது உடனடி தீர்வாக, உரிய ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

சென்னிமலை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்கள் மனுக்கள் வழங்கியதை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

சென்னிமலை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்கள் மனுக்கள் வழங்கியதை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை கைக்கோள முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு, பொதுமக்கள் மனுக்கள் வழங்கியதை பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கோயம்புத்தூரில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மற்றும் ஈரோடு மாநகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் "மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது, இன்று (டிச.18) திங்கட்கிழமை முதல் வருகின்ற (ஜன.06) சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.


இம்முகாமில், தனி நபர்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனு செய்து பயன்பெறலாம் என்றார். தொடர்ந்து, நடைபெற்ற முகாமில் மனுக்கள் வழங்கிய 6 நபர்களுக்கு உடனடி நடவடிக்கையாக, வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகைக்கான சான்றிதழ், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்டவை பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியர் பூபதி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்