பெருந்துறையில் நாளை மறுநாள் பொற்கிழி வழங்கும் விழா; அமைச்சர் முத்துசாமி ஆய்வு

பெருந்துறையில் நாளை மறுநாள் பொற்கிழி வழங்கும் விழா; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
X

பொற்கிழி வழங்கும் விழா நடைபெற உள்ள இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்ட பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற உள்ள இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.

பெருந்துறையில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற உள்ள இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள திமுக மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்டம், ஈரோடு வடக்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்படுகிறது. இதற்கான விழா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கோவை செல்லும் சாலையில் உள்ள சரளைப் பகுதியில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி பேசுகிறார். முன்னதாக அவர், 16ஆம் தேதி வியாழக்கிழமை இரவு ஈரோடு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பொற்கிழி வழங்கும் விழா நடைபெற உள்ள இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அங்கேயே கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், எம்பி அந்தியூர் செல்வராஜ், எம்எல்ஏ வெங்கடாசலம், பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டிபி சச்சிதானந்தம், மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ், மாநில திமுக விவசாய அணி துணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பி.கே. பழனிசாமி, முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், சத்தியமங்கலம் முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.கந்தசாமி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திமுக அனைத்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி குறித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகிகள் மூத்த உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட திமுக சார்பில் பொற்கிழி வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி கொரோனாவால் உயிரிழந்த திமுக உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழாவை தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாடு, நாடாளுமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர் அணியினர் மத்தியில் பேசுகிறார். தொகுதி வாரியாக 1500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இந்த கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரகாஷ், அமைப்பாளர்கள் ஜெ.திருவாசகம், திருவேங்கடம் ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?