முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் முத்துசாமி இன்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று ((10ம் தேதி) தொடங்கி வைத்தார்.

ஈரோடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 21,626 மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.


பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் மற்றும் கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கம், கொங்கு பொறியியல் கல்லூரி, நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேளாளர் பொறியில் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீரர்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2, ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகள் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாநில அளவில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.


மாநில அளவிலான போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மாநில அளவில் ஈரோடு மாவட்டத்திலிருந்து பங்கு பெற்ற வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் பரிசுகளை பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து தர வேண்டும். இப்போட்டியில் பங்குபெறும் அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சோலார் மற்றும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆகிய இடங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு (ஈரோடு வன கோட்டம்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil