பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனுக்கு அரங்கம், சிலை கட்டடப் பணி: அமைச்சர் ஆய்வு

பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனுக்கு அரங்கம், சிலை கட்டடப் பணி: அமைச்சர் ஆய்வு
X

பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனுக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்கும் கட்டடப் பணியினை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் உட்பட பலர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுக்கு அரங்கம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கும் கட்டடப் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (17ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுக்கு அரங்கம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கும் கட்டடப் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (17ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானிசாகரில் சுதந்திர போராட்ட தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுக்கு அரங்கம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கும் கட்டடப் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை அமைவதற்கு காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான எம்.ஏ.ஈஸ்வரனின் தியாகத்தை பாராட்டுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த அரங்கமானது, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்கின்ற வகையில் ஏறத்தாழ ரூ.3.04 கோடி மதிப்பில் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சரால் இந்த அரங்கம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. தியாகி ஈஸ்வரன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் முயற்சி எடுத்து பவானிசாகர் அணை உருவாக காரணமாக இருந்த காரணத்தினால் பாராட்டப் பெற்றவர்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சுமார் பதினாறு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சுதந்திர போராட்ட தியாகியாகவும், அதேசமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படுகின்ற வகையில், சுமார் 3 லட்சம் ஏக்கர் பாசனம் வரக்கூடிய இந்த அணை வருவதற்கும் காரணமாக இருந்தவர் தியாகி ஈஸ்வரன். அவரின் தியாகத்தை போற்றுகின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அரங்கமும், திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கமானது, தரைதளம் திருமண மண்டபம், உணவு உண்ணும் இடம், மணமகன் (ம) மணமகள் அறை, உட்காரும் பகுதி, நடைபாதை, கழிவறை என 894.45 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் திருமண மண்டபம், வரவேற்பு அறை, மணமகன் (ம) மணமகள் அறை, சமையலறை, பொருட்கள் சேமிப்பு அறை, உணவு உண்ணும் இடம், ஆண்கள் (ம) பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், ஆழ்துளை கிணறு, கீழ்நிலைத் தொட்டி, மேல்நிலைத் தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி, மற்றும் தியாகி எம்.ஏ.ஈஸ்வரனின் வெண்கல திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமையப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) கார்த்திகேயன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
மழைக்காலங்களில் மின்சார ஷாக்...! எப்படி தவிர்ப்பது..?