அந்தியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு
வெள்ளம் சூழ்ந்த அந்தியூர் பேரூராட்சி, காமராஜ் சாலை குறுக்கு வீதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் உட்பட பலர் உள்ளனர்.
Flooded Areas -ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோர் முன்னிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி ஈரோடு மாவட்டத்தில் மழை, வெள்ள காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் தற்போது கூடுதலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இத்தகைய நேரங்களில் பொது மக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வரும் காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காண்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தேவையான இடங்களில் அமைந்துள்ள தரைமட்ட பாலங்களை உயர் மட்ட பாலங்களாக அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்.சு.முத்துசாமி அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாமடுவு பகுதியில் மழைநீர் வெளியேறுவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பேரிடர் மீட்பு குழுவினர்கள் மேற்கொள்ளும். பணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட, பவானிசாலை, பூங்கொடி மருத்துவமனை அருகில், காமராஜர் சாலை குறுக்கு வீதி, நேரு வீதி, கண்ணப்பன் கிணறு வீதி, பெரியார் நகர் ஆகிய வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், அண்ணாமடுவு, அந்தியூர் பெரிய ஏரி,பெரியார்நகர்,அழகு நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.
இந்த ஆய்வின்போது, அந்தியூர் வட்டாட்சியர் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், வருவாய் ஆய்வாளர் சுதாகர், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார்,அந்தியூர் பேரூர் கழகச் செயலாளர் காளிதாஸ், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகாலிங்கம், முன்னாள் எம்எல்ஏ குருசாமி, பவானி திமுக ஒன்றிய செயலாளர் கேப்டன் துரைராஜ், மாவட்ட சிறு பான்மை பிரிவு அமைப்பாளர் சோபியா சேக், துணை அமைப்பாளர் செபஸ்தியான். கோஆப்டெக்ஸ் மாநில இயக்குனர் எஸ். பி. ரமேஷ், தொமுச செயலாளர் ரங்கநாதன், நாகராஜ். சித்த மலை, முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu