ஈரோடு மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
ஈரோடு மாவட்ட கல்வித்துறை அலுவலர்களின் அலுவலகங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் நூலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை (இன்று) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு, பெருந்துறை மற்றும் மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படும் நூலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முழுவதும் பயணித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நூலகங்கள், பள்ளிகள், கல்வித்துறை அலுவலர்களின் அலுவலங்களில் ஆய்வு செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் 100-வது ஆய்வை தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் நிறைவு செய்தார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களிடம் உரையாடினார்.
மேலும், பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் நிறைவேற்று மாறும், அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்களை எவ்வித தொய்வும் இல்லாமல் அலுவலர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu