ஈரோடு இடைத்தேர்தல்: பறையடித்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்

ஈரோடு இடைத்தேர்தல்: பறையடித்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
X

ஈரோட்டில் பறையடித்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலை நிகழ்ச்சியின்போது பறையடித்து மகிழ்ந்தார்.

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலை நிகழ்ச்சியின்போது பறையிசைத்து மகிழ்ந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈடுபட்டு உள்ளார். நேற்று (சனிக்கிழமை) அவர் அன்னை சத்யா நகர், கருங்கல்பாளையம், வண்டியூரான்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர், காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், நீர் மேலாண்மையை வலியுறுத்திய தட்டு விளையாட்டுகளையும் பார்வையிட்டு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அப்போது மாணவர்களிடம் இருந்து பறை இசைக்க கற்றுக் கொண்ட அமைச்சர், பறை இசைத்து மகிழ்ந்தார். இது அனைவரையும் கவர்வதாக இருந்தது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil