கோபி அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து

கோபி அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து
X

Erode news-  விபத்துக்குள்ளான லாரிகள்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Erode news, Erode news today- கோபி அருகே நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம் குந்தா சாம்ராஜ் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவர் லாரியில் மரபாரம் ஏற்றிக்கொண்டு பெங்களூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்காக ஈரோடு மாவட்டம் அத்தாணி-சத்திய மங்கலம் சாலையில் வந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஏழூர் மேடு வரும் போது லாரி டயர் பஞ்சர் ஆகிவிட்டது. இதனால் மோகன் வாகனத்தை சாலையோரம் இடது புறமாக நிறுத்தி விட்டு பஞ்சர் ஒட்டி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அதே திசையில் சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 38) என்பவர் ஒட்டி வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக - மரபாரம் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு 2 இருந்த ஓட்டுநர் மோகனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறி துடித்த மோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மினி லாரியின் முன்பக்க பகுதி நொறுங்கியது.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் மினி லாரி ஓட்டி வந்த கனகராஜ் தூங்கி விட்டதால் இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business