நிலுவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அக். 25ல் ஆர்ப்பாட்டம்

நிலுவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அக். 25ல் ஆர்ப்பாட்டம்
X
நிலுவைத்தொகையை ஆவின் தரக்கோரி, அக்.25ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க, மாநில அளவிலான கூட்டம், காணொலி வாயிலாக நடந்தது. இதில், மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். பொது செயலாளர் முகம்மது அலி, பொருளாளர் சங்கர் உட்பட பல மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் குறித்து, சங்கத் தலைவர் முனுசாமி கூறியதாவது: தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில், 40 முதல், 110 நாள் வரை, பாலுக்கான பணத்தை வழங்காமல் ஆவின் நிர்வாகம், 500 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது.

தீபாவளிக்கு முன்பாக, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தீபாவளிக்கு போனஸ் வழங்க வேண்டும். ஆவின் கலப்பு தீவனத்தை அனைத்து மாவட்டத்துக்கும் வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 25ல் அனைத்து ஆவின் முன்பும், அரசு அலுவலகம் முன்பும் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
the future of ai in healthcare