ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை
இ-ஷ்ரம் வலைத்தளம்.
ஈரோடு மாவட்டத்தில் புலம் பெயர்ந்து வசித்து வரும் தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக ஈரோடு மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு www.eshram.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறாக புலம் பெயர்ந்த தொழிலாளிகள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.
மேற்கண்ட மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் விண்ணப்பதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம்.
எனவே, வெளிமாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை கோரி www.eshram.gov.in வலைதளத்தில் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (9ம் தேதி) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழ்நாட்டில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் பெற விரும்பினால் தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி இ-ஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்து புதிய குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu