பேருந்தில் தவறிய மனநலம் குன்றிய பெண் குணமடைந்து குடும்பத்துடன் சேர்ப்பு

பேருந்தில் தவறிய மனநலம் குன்றிய பெண் குணமடைந்து குடும்பத்துடன் சேர்ப்பு

மனநலம் குன்றிய மாணிக்கவள்ளி குணமடைந்து பிறந்தநாள் கொண்டாடினார்.

பேருந்தில் தவறிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் குன்றிய பெண்ணை குணப்படுத்தி கோபி அட்சயம் அறக்கட்டளையினர் குடும்பத்துடன் சேர்த்தனர்.

பேருந்தில் தவறிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் குன்றிய பெண்ணை குணப்படுத்தி கோபி அட்சயம் அறக்கட்டளையினர் குடும்பத்துடன் சேர்த்தனர்.

திருப்பூர் மாவட்டம் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவள்ளி (வயது 45). சிறு வயதில் இருந்தே மனநலம் குன்றிய இவர் தந்தையின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார். தந்தை காலமான பிறகு அக்கா திலகவதியின் அரவணைப்பில் இருந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது அக்காவுடன் பேருந்தில் கோயிலுக்கு சென்ற மாணிக்கவள்ளி செல்லும் வழியிலேயே வழிதவறி சென்றுவிட்டார்.

மனவளர்ச்சி குன்றியதால் கையில் செல்போன் இல்லாமல், தனது ஊர், முகவரி, தொடர்பு எண் ஏதுமின்றி எங்கு செல்வது என்று தெரியாமல் பயந்து போனார். நாளடைவில் உறங்க இடமின்றி சாலையோரங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் வசித்து வந்தார். வயிற்றுப் பசிக்காக யாசகம் பெற ஆரம்பித்தார். இவர் காணாமல் போன துயரத்தில் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், செய்தித்தாளில் விளம்பரம் செய்தும், காவல் துறையிடம் தகவல் தெரிவித்தும் தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், ஒட்டர்கரட்டுபாளையம், பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாணிக்கவள்ளி மீட்டு கோபிச்செட்டிப்பாளையம், மொடச்சூர் வாரச்சந்தை அருகில் உள்ள அட்சயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருந்துவ ஆலோசனை, உடற்பயிற்சி, யோகா போன்ற பல்வேறு பயிற்சிகள் மூலம் சற்று முன்னேற்றம் கண்டார். இந்நிலையில் அட்சயம் அறக்கட்டளை சமூக வலைத்தள பக்கத்தில் இவரது பதிவை பார்த்த குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி கொண்டு அட்சயம் இல்லத்திற்கு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று மாணிக்கவள்ளியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் குடும்பத்துடன் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டார். இந்நிகழ்வில், அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
Similar Posts
ஹரிஷ் கல்யாண் சம்பளம் இவ்வளவு தானா? இன்னும் 1 கோடியே வரலியே..!
பிரகாஷ்ராஜ், கௌதம்மேனன், பாபிதியோல், பூஜா, ப்ரியாமணி, மமிதா இன்னும் எத்தன பேரு நடிக்கிறாங்க?
வடகிழக்கு பருவமழை: ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஈரோடு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் வழித்தட விவரங்கள்
புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் மலிந்த எழுத்துப் பிழைகள்..! குழந்தைகள் கற்றுக்கொள்வதெப்படி..?
பேருந்தில் தவறிய மனநலம் குன்றிய பெண் குணமடைந்து குடும்பத்துடன் சேர்ப்பு
இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு..!
மருதமலை முருகன் கோயில் தரிசனத்திற்கு இ-பாஸ்..! பக்தர்கள் கவலை..!
நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர் விலகல்..! உட்கட்சி பிரச்னையா..?
எல்லாமே பொய்யி..! இந்தியன் 3 தியேட்டர்லதானாம்..!
பருவமழை முன்னெச்சரிக்கை : புதிய படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி..!