ஈரோடு மாவட்டத்தில் வரும் 26ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 26ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்
X
ஈரோடு மாவட்டத்தில் டிச.26 ஆம் தேதி 512 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வரும் டிச.26, ஆம் தேதி 16-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமானது, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 512 மையங்களில், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணையாக 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.

மாவட்டம் முழுவதும் 2,048 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது, புதிதாக வெளிநாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, தடுப்பூசி மிகவும் அவசியம். முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!