ஈரோடு ஆட்சியரிடம் மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் மனு

ஈரோடு ஆட்சியரிடம் மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் மனு
X

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்களைத் தேடி மருத்துவ திட்ட பெண் பணியாளர்கள்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்கள் ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (இன்று) மனு அளித்தனா்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்கள் ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (இன்று) மனு அளித்தனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மக்களைத் தேடி மருத்துவ திட்டப் பணியாளா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மக்களைத் தேடி மருத்துவம் என்னும் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் இல்லம் தேடி சென்று நோய்களைக் கண்டறிவது, நோய்க்கான சிகிச்சை, தொடர் கவனிப்பு என நிலையான சேவைகள் அளித்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என நிர்ணயம் செய்ய வேண்டும். முழுநேர பணியாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும். மேலும் மருத்துவத்துறையின் ஊழியர்கள் என்று அறிவிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பணியாற்றுவதற்குத் தேவையான செல்போன், இணைய வசதி, பதிவேடுகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். கூடுதலாக சுமத்தப்பட்டுள்ள பிரதமர் காப்பீட்டு திட்டத்திற்குப் பயனாளிகளைச் சேர்ப்பது மற்றும் புற்று நோய் கண்டறிவது உள்ளிட்ட வேலைப் பளுவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வின் போது, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் உடனிருந்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil