சென்னிமலையில் வரும் 19ம் தேதி கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
மருத்துவ முகாம் (பைல் படம்).
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னிமலையில் கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் 2023-2024ம் ஆண்டின் அறிவிப்பின்படி, முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வினை கருத்தில் கொண்டு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசிப்பிடாரியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மஹாலில் கைத்தறி நெசவாளர்கள் நோய்களில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ முகாம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
இம்மருத்துவ முகாமில் நுரையீரல் சம்மந்தமான நோய்கள். பரிசோதனை,மூட்டு வலி ஆகியவற்றிற்கு முன்னுரிமை சிகிச்சை கண் வழங்கப்படுவதோடு, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை. உடல் பருமன் பரிசோதனை (எடை உயரம் விகித குறியீடு பிஎம்ஐ), இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த அழுத்தம் கண்டறிதல் பரிசோதகர்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், இ.சி.ஜி பரிசோதனை. எலும்பு, சிறுநீரகம், முழுமையான இரத்தப் பரிசோதனை, பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம். ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வரும்முன் காப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை, மார்பு எக்ஸ்ரே, இரத்த மருத்துவ பரிசோதனைகள், பல் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இம்முகாமில் அனைத்து நெசவாளர்களும் தவறாது கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu