/* */

தமிழகத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி எடுபடாது: ஈரோட்டில் வைகோ பேட்டி

தமிழகத்தில் பாஜக வாக்குறுதி எடுபடாது என்று ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி எடுபடாது: ஈரோட்டில் வைகோ பேட்டி
X

மறைந்த ஈரோடு கணேசமூர்த்தி எம்பி இல்லத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

பாஜக வாக்குறுதி எடுபடாது என்று ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஈரோடு வந்தார். அப்போது, பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி எம்பியின் இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் கணேசமூர்த்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மறைந்த எம்பி கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.


பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ கூறியதாவது:-

பாஜக தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருக்கிறது. புதிதாக சோதனை செய்ய இந்த முறை தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

தமிழகத்தினை 9 முறை பிரதமர் நரேந்திர மோடி சுற்றி வந்து விட்டார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கு இவ்வாறு போனதில்லை. கொரோனா, வெள்ள பேரிடர் போது எட்டிப் பார்க்காத நரேந்திர மோடி எப்படியாவது வெல்ல வேண்டும் என தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். பிரசாரத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. தேர்தல் களம் முழுக்க முழுக்க இண்டியா கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.40க்கு 40ம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய அமைச்சர்கள் வருகை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. முன்பும் வந்தார்கள். அவர்கள் வருவதால் எந்த வேறுபாடும் ஏற்பட போவது கிடையாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரவு மணிக்கு மேல் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் தான் கவனிக்க எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 22 April 2024 12:41 PM GMT

Related News