அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா

அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா
X

அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா, நேற்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா, நேற்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிபிஎம் அலுவலகம், கிருஷ்ணாபுரம், க.மேட்டூர், மீனவர் தெரு, சாலையோர சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில், நேற்று அந்தந்த இடங்களில் கொடி ஏற்றப்பட்டது. மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகில் சுமைப்பணி சங்கம், சாலைப் போக்குவரத்து சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கொடி ஏற்றப்பட்டு பெயர்ப் பலகை திறக்கப்பட்டது.

இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், சிபிஎம் தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுக்கா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜி.மயில்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.கீதாசேகர், மீனவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எல்.சேகர், சிபிஎம் தாலுக்கா கமிட்டி உறுப்பினர் ஆர்.மாரியப்பன், சுமைப்பணி சங்க தலைவர் ஆர்.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!