ஈரோட்டில் தனியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் மராத்தான் ஓட்டம், ரத்த தான முகாம்
Erode news, Erode news today- ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் மனிதம் சமூக அமைப்பின் சார்பில், ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மினி மராத்தான் போட்டிகள் நடைபெற்றது. 15 வயது மேற்பட்டோருக்கான இருபாலர்கள் கலந்துக் கொண்ட இந்த போட்டியினை, ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளர் ஜெய்சிங், பிரபல மனித வள முன்னேற்ற எழுத்தாளரும், பேச்சாளருமான ஈரோடு கதிர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில், ஆண்களுக்கான மினி மராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி பெருந்துறை வாய்க்கால்மேட்டில் உள்ள நந்தா தொழில்நுட்ப வளாகம் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரத்தினைக் கடந்து முடித்தார்கள். அதுபோல பெண்களுக்கான மினி மராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி ஈரோடு புதிய டீச்சர்ஸ் காலனியில் செயல்பட்டு வரும் நந்தா சென்டரல் சிட்டி பள்ளி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தினைக் கடந்து முடித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, நந்தா கல்வி நிறுவனங்களின் உயிர்த்துளி அமைப்பின் சார்பில், ரத்த தான சிறப்பு முகாம் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை ஈரோடு கதிர் துவக்கி வைத்தார். இம்முகாமில் நந்தா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தங்களது ரத்த தானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நந்தா பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மினி மராத்தான் தொடர் ஓட்டப் போட்டிகளில் முதல் 10 இடங்களை தக்க வைத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி. முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் மினி மராத்தான் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், ரத்த தானம் செய்தவர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களான பொறியியல் கல்லூரின் முதல்வர் ரகுபதி மற்றும் பிசியொதெரபி முதல்வர் மருத்துவர் மணிவண்ணன், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu