ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன், நவரத்தின மாலை திருடியவர் கைது

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன், நவரத்தின மாலை திருடியவர் கைது
X
ரயில் பயணியிடம் செல்போன், நவரத்தின மாலை திருடிய சங்கர பாண்டியனை ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் ரயில் பயணியிடம் 2 செல்போன்கள், நவரத்தின மாலை திருடியவரை ரயில்வே போலீசார் நேற்று (22ம் தேதி) கைது செய்தனர்.

ஈரோட்டில் ரயில் பயணியிடம் 2 செல்போன்கள், நவரத்தின மாலையை திருடியவரை ரயில்வே போலீசார் நேற்று (22ம் தேதி) கைது செய்தனர்.

கோவை மாவட்டம் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 51). இவர், கடந்த 29ம் தேதி மன்னார்குடி- கோயமுத்தூர் செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். ரயில் ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருடைய இரண்டு செல்போன்கள், நவரத்தின மாலை, நவரத்தின கற்கள் வைத்த மோதிரம் ஆகிய திருட்டு போனது.

இதுகுறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள பூங்கா அருகில் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.

அவரைப் பிடித்து விசாரித்த போது அவர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், 2வது தெருவைச் சேர்ந்த சங்கர் பாண்டியன் (வயது 48) என்பதும், சண்முகவேலிடம் இருந்து செல்போன்கள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 செல்போன்கள், நவரத்தின மாலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், சங்கர பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!