ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி.

ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்ததாக சென்னிமலையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Erode Today News, Erode News, Erode Live Updates- - ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்ததாக சென்னிமலையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). இவர், ஈரோடு அருகே உள்ள பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் பேரில், போலீசார் சுந்தரமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

விழிப்புணர்வு பதிவு:- சிறுவர், சிறுமிகள் வன்கொடுக்கைக்கு ஆளாக்கப்பட்டால் தைரியமாக 1098 என அரசின் உதவி எண்ணுக்கு அழைத்தால் அவர்களுக்கு போதிய பாதுக்காப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!