மக்களுடன் முதல்வர் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டமாக 72 இடத்தில் முகாம்

மக்களுடன் முதல்வர் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டமாக 72 இடத்தில் முகாம்
X

Erode news- மக்களுடன் முதல்வர் திட்டம் (பைல் படம்).

Erode news- மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 ஊராட்சிகளில் 72 இடங்களில் நடக்கிறது.

Erode news, Erode news today- மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 ஊராட்சிகளில் 72 இடங்களில் நடக்கிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்ட முகாமானது, முதற்கட்டமாக 2023 டிசம்பர் மாதம் 2024 ஜனவரி மாதங்களில் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது.

தற்போது, இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 15 அரசுத்துறை சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம், ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 கிராம ஊராட்சிகளுக்கு வரும் ஜூலை 11ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை 72 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து மேற்படி முகாம்களில் மனுக்களை விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-









Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!