ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
X

சென்னிமலை குமாரவலசு ஊராட்சி வெள்ளோடு அண்ணமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தொடங்கி வைத்து, முகாமினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு எம்பி பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சென்னிமலையில் அமைச்சர் முத்துசாமி இன்று (11ம் தேதி) தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை சென்னிமலையில் அமைச்சர் முத்துசாமி இன்று (11ம் தேதி) தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழா சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் குமாரவலசு ஊராட்சி வெள்ளோடு அண்ணமார் திருமண மண்டபத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து, முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், வட்ட தொழில் மையம் சார்பில் 4 பயனாளிகளுக்கு நீட் மற்றும் அண்ணல் அம்பேத்கார் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் ஒப்பளிப்பு மானியத்தினை வழங்கினார்.


தொடர்ந்து, நடைபெற்ற விழாவில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மற்றும் ஈரோடு மாநகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் 18.12.2023 முதல் 06.01.2024 வரை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 82 முகாம்கள் நடத்தப்பட்டது.

இதில் 13 துறைகள் பங்கேற்று மனுக்களைப் பெற்றார்கள். இதில் 13,997 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 9,586 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதேபோல், மீதமுள்ள பகுதிகளிலும் இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரியில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை இன்று (11ம் தேதி) துவக்கி வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது ஊரக பகுதிகளுக்கான முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 214 கிராம ஊராட்சிகளுக்கு இன்று (11ம் தேதி) முதல் வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை 72 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அந்தந்த ஊராட்சிகளில் இம்முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் 15 துறைகள் பங்கேற்று, 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளது.


முகாமில் இச்சேவைகள் அல்லாது பெறப்படும் மனுக்கள் மீது, முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்படுகிறது. இதனைத் கொண்டு, தொடர்புடைய துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் பொழுது, அங்கும் இம்மனு பதிவு செய்யப்படுகிறது. மேலும், அத்துறை சார்பாக பெறப்படும் மனுக்கள் மீது 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காயத்ரி இளங்கோ, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு