ஈரோடு அடுத்த நசியனூரில் மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

Erode news- நசியனூரில் மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
Erode news, Erode news today- நசியனூரில் மாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு அடுத்த நசியனூரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. நசியனூர் மற்றும் 27 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மாகாளியம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவிலின் திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. அன்று மாலை சுவாமி விக்ரகம் மற்றும் ஆபரணங்கள் பெறுதல், 7 மணிக்கு கணபதி ஹோமம் செய்தல், 8 மணிக்கு பூ போடுதல், 9 மணிக்கு ஈஸ்வரன் கோவில் இருந்து பெரிய பூசாரிக்கு கும்பம் வைத்து சக்தி அழைத்து வருதல், 10 மணிக்கு மாகாளியம்மனுக்கு பூஜை செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாகாளியம்மன் மற்றும் காவல் தெய்வங்களுக்கு தினமும் காலை 7 மணிக்கு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்து வந்தது. இதனையடுத்து, 6ம் தேதி மாலை 4 மணிக்கு காவிரி ஆற்றங்கரை சென்று தீர்த்தம் எடுத்து வருதல், 8 மணிக்கு சுவாமி விக்ரகம் அலங்காரத்துடன் தீர்த்தம் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் 7ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பொங்கல் வைத்தல், காலை 9 மணிக்கு மாவிளக்கு எடுத்து திருவீதி உலா வருதல், காலை 10 மணிக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்தல், மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராடி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை பூசாரி வெங்கடாசலம் மற்றும் பூசாரிகள் காளீஸ்வரன், வெள்ளியங்கிரி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu