மதுரை கொலை சம்பவம்: சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேர் சரண்
சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளிகள் 4 பேர்.
மதுரையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையப் பகுதியில் டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், மனோஜ் (வயது 26) என்பவர் கடந்த மாதம் 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25), ஹரிமணி (வயது 22), அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 26), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கருப்பையா (வயது 21) ஆகிய நான்கு பேர் நேற்று (9ம் தேதி) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாதேவி சரணடைந்த 4 வாலிபர்களையும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி, ஆயுதப்படை போலீசார் 4 வாலிபர்களையும் அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu