அந்தியூர் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு..!

அந்தியூர் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு..!
X

பேருந்தில் தவறவிட்ட ரூ.12 ஆயிரத்தை சரோஜாவிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் ரத்தினவேல்‌.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் பணம் உரிய பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவர், அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். பின்னர், பி.மேட்டுப்பாளையத்தில் வந்து இறங்கினார்.

அப்போது, அவர் கைப்பையை பேருந்திலேயே வைத்து விட்டாராம். சிறிது தூரம் சென்றவுடன் பையை தவறவிட்ட அந்த பெண் பதட்டம் அடைந்து பையை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பேருந்து நடத்துநர் ராமன் மற்றும் ஓட்டுநர் ரத்தினவேல் இருவரும் அந்தப் பையை பத்திரமாக எடுத்து அந்தியூர் கிளை மேலாளர் சண்முகம், உதவி பொறியாளர் நிர்மல் குமார் ஆகியோரிடத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, பையை தவறவிட்ட சரோஜா அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு வந்து கிளை மேலாளர் சண்முகத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். கிளை மேலாளர் தங்களுடைய பை இங்கு தான் உள்ளது. அதில் என்ன பொருட்கள் உள்ளன என விசாரணை செய்தார். விசாரணையில் அந்த பையில் தொகை ரூ.12 ஆயிரம் மற்றும் பொருட்கள் இருந்தன என்று கூறினார்.

இதனையடுத்து கிளை மேலாளர் அந்தப் பையை சரோஜாவிடம் ஒப்படைத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட சரோஜா ஓட்டுநர் ரத்தினவேல், நடத்துனர் ராமன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare