ஈரோடு மாவட்டத்தில் டிச. 13 சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் டிச. 13 சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்
X

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் வருகிற டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் வருகிற டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் 2023-2024ம் நிதி ஆண்டில், தமிழ்நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1 கோடியே 50 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட உள்ளது.

தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களான சிறு கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்களின் கீழ் கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிசம்பர் 13ம் தேதி நடக்கிறது. அதன் படி அன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குருமந்தூர் கிளை, டி.ஜி.புதூர் கிளை, சித்தோடு கிளை, ஈரோடு மாணிக்கம்பாளையம் கிளை, பஜார் கிளை ஆகிய 5 கிளைகளில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே சிறுபான்மையினர்கள் மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!