கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சாதனை

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சாதனை
X

Erode news- கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

Erode news- பெருந்துறையில் இருந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் வந்த கல்லீரலை நோயாளிகளுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

Erode news, Erode news today- பெருந்துறையில் இருந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் வந்த கல்லீரலை நோயாளிகளுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் (வயது 20) என்ற இளைஞன் கடந்த 11ம் தேதி விபத்தில் சிக்கினார். அவர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், கடந்த 14ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார் என்பதை மருத்துவக் குழுவினர் அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் என குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர்.

அவர்களின் விருப்பப்படி மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுக்கப்பட்டு ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 15 நிமிடத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பெற்று வரும் 58 வயது மிக்க நபருக்கு தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் அந்த கல்லீரல் பொருத்தப்பட்டது.

சுமார் இரவு 10 மணி அளவில் நடைபெற்ற சிகிச்சை மறுநாள் காலை 9.30 மணி வரை டாக்டர் சரவணன், டாக்டர் கார்த்திக் மதிவாணன் குழு தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்பதை டாக்டர் சரவணன் தெரிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆணையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் பெற்ற ஒரே மருத்துவமனை அபிராமி கிட்னி கேர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஈரோட்டின் வரலாற்றிலேயே 3வது முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

Tags

Next Story
ai solutions for small business