அத்தாணி கைகாட்டி அருகே வாழை தோட்டத்தில் மது விற்றவர் கைது‌

Police Arrest | Erode News Live
X

பைல் படம்.

Police Arrest - அத்தாணி கைகாட்டி பாலத்தின் அருகே உள்ள சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Police Arrest - ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி கைகாட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பாலத்தின் அருகே உள்ள வாழை தோட்டத்தில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் மேலூர் ஆலாம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் (47) என்பவர் தற்போது அத்தாணியில் தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!