அந்தியூரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு

அந்தியூரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு
X

மது பாட்டில்கள் போலீசார்  ஏரியில் கொட்டி அழித்தனர்.

அந்தியூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஏரியில் கொட்டி அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையம் மற்றும் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்றவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று கோபி கலால் வட்டாட்சியர் தியாகராஜன் முன்னிலையில் அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் மது பாட்டில்களை அந்தியூர் பெரிய ஏரியில் போட்டு உடைத்தனர். இதில் கடந்த ஆறு மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் நேரத்தில் போலீசார் பிடித்த மது பாட்டில்களை உடைத்த சம்பவம் பொதுமக்களிடத்திலே பெரும் வரவேற்பை பெற்றது.

Tags

Next Story