ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Erode news- ஈரோடு மாவட்ட தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம்.
Erode news, Erode news today- வாக்குப்பதிவுக்கு பின் தேர்தல் விதிகளை தளர்த்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூக்கு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில், 20 நாட்களுக்கு மேலாக தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், மளிகை, ஜவுளி ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், விவசாய விளைபொருட்கள் என பல்வேறு தரப்பினர் விற்பனை மற்றும் கொள்முதலுக்கு ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல முடியவில்லை. மேலும், பொருட்களாக எடுத்து செல்லவும் சிரமப்படுகின்றனர்.
வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதி தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தொழில், வணிகம் முற்றிலும் முடங்கி விடும் சூழல் உருவாகும். எனவே, வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ் பெற அறிவிப்பு வெளியிட வேண்டும். ஏதோ சிலர் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் செய்யும் தவறுக்காக, வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர், மக்களை தொந்தரவு செய்வது, தொழில், வணிக வளர்ச்சிக்கு பாதிப்பாக அமைகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu