ஈரோட்டில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் புத்தறிவுப் பயிற்சி

Erode news- பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் புத்தறிவுப் பயிற்சியில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் புத்தறிவுப் பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் புத்தறிவுப் பயிற்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி இன்று (மார்ச் 08) நடைபெற்றது.
இந்த பயிற்சியில், குழந்தை திருமணம் மற்றும் இள வயது கர்ப்பத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தினால் தாய்-சேய்க்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகளை ஊக்குவித்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத் தடைச் சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மருத்துவ அலுவலர் தனலட்சுமி, மாவட்ட உதவி திட்ட மேலாளர் வசந்த், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் கீதா, காவல் ஆய்வாளர் அனுராதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu