கடம்பூர் மலைப்பகுதி சாலையில் சிறுத்தை நடமாட்டம்

கடம்பூர் மலைப்பகுதி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
X

மல்லியம்மன் கோவில் அருகே உள்ள போன் பாறை என்ற இடத்தில் சாலையோரம் இருந்த சிறுத்தை.

சத்தியமங்கலம் - கடம்பூர் மலைப்பகுதி சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் - கடம்பூர் மலைப்பகுதி சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குத் தேவையான அன்றாட பொருள்களை, மக்கள் சத்தியமங்கலத்தில் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடம்பூரைச் சேர்ந்த 2 பேர் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூருக்கு இருசக்கர சென்று கொண்டிருந்தனர். மல்லியம்மன் கோவில் அருகே உள்ள போன் பாறை என்ற இடத்தில் சென்ற போது சாலையோரத்தில் சிறுத்தைப்புலி நடமாடுவதை நேரில் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மோட்டார் சைக்கிளை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர்.

ஆனால் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தைப்புலி எந்தவித பயமின்றி சாலையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இந்த காட்சியை இருசக்கர வாகனத்தில் இருந்த படியே தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த படம் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது. இது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அறிந்த கடம்பூர் வனத்துறையினர், சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்