ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதி சாலையில் 2வது நாளாக நடமாடிய சிறுத்தை..!
சாலையில் நடமாடிய சிறுத்தை.
கடம்பூர் மலைப்பகுதி சாலையில் 2வது நாளாக சிறுத்தை நடமாடியது, வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் சத்தியில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாடியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூருக்கு மலைப்பாதை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் அருகே சென்றபோது சிறுத்தை சாலையில் நடந்து வந்ததை கண்டதும், டிரைவர் மற்றும் வேனில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிரைவர் வேனை நிறுத்தினார்.
இதைத்தொடர்ந்து வேனில் இருந்த பயணிகள், சிறுத்தையை தங்களுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் 2வது நாளாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu