சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து சென்ற சிறுத்தை

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து சென்ற சிறுத்தை
X

Erode news- திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து சென்ற சிறுத்தையை படத்தில் காணலாம்.

Erode news- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து சென்ற சிறுத்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Erode news, Erode news today- சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து சென்ற சிறுத்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை சாலை அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதை சாலையை சிறுத்தை அவ்வப்போது கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று (16ம் தேதி) மாலை 18வது கொண்டை ஊசி வளைவு அருகில், ஒரு சிறுத்தை சாலையை கடந்து பாய்ந்தோடியது. அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையுடன் அச்சத்துடன் தரிசிக்க நேரிட்டது. ஒரு சிலர் மொபைலில் படம், வீடியா எடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings