ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைகளுக்கு அப்பால் கற்றல் நிகழ்ச்சி
Erode News- கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இளநிலை வணிகவியல் துறை சார்பாக கொளத்துப்பாளையத்தில் நீட்டிப்புச் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
Erode News, Erode News Today- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைகளுக்கு அப்பால் கற்றல் என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைகளுக்கு அப்பால் கற்றல் எனும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படை செயல்களைக் கற்றுக்கொள்ளும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் வழிகாட்டுதலிலும் கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் முன்னெடுப்பிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்த வாரம் (31ம் தேதி) இன்று முற்பகல் அமர்வில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் விபத்து நேரத்தில் ஒருவருக்குச் செய்ய வேண்டிய முதலுதவிச் சிகிச்சை குறித்து அத்தியாவசியமான முதலுதவித் திறன்கள் உயிர் காப்பதற்கான வழிமுறை என்னும் தலைப்பில் முதலுதவிப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈரோடு குழுவின் தலைவர் ரவி, மாநில முதலுதவிப் பயிற்சியாளர் மற்றும் சேலம் ஜூனியர் செஞ்சிலுவைச் சங்கத்தின் குழுத்தலைவர் பிரபாகரன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகின்றனவா? மட்டுப்படுத்துகின்றனவா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் தினகரன் நடுவராக இருந்து இந்நிகழ்ச்சியை நடத்த ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றுப் பேசினர்.
முன்னதாக, இளநிலை கணினி அறிவியல் துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் சார்பில் புங்கம்பாடி, கனகபுரம், கம்புளியம்பட்டி, நஞ்சனபுரம் மற்றும் முகாசிப் புலவபாளையம் கிராமங்களில் கள செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஈரோடு அடுத்த சித்தோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஜவுளி சந்தை டெக்ஸ்வேலிக்கு மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, இளநிலை வணிகவியல் துறை சார்பாக கொளத்துப்பாளையத்தில் நீட்டிப்புச் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, இளநிலை வணிக மேலாண்மைத் துறை சார்பாக பெருந்துறை சிப்காட்டில் அமைந்துள்ள கே.ஜி. ஃபேப்ரிக்ஸ்க்கு மாணவியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இளநிலை நிறுவனத்திற்கும் மாணவ உயிர்வேதியியல் துறை மாணவ, மாணவியர் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சென்று வந்தனர். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வகுப்பறைகளுக்கு அப்பால் கற்றல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி மற்றும் குழுவினர், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சிகளால் ஒட்டு மொத்த கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu