அந்தியூர் - பர்கூர் மலைப்பாதை சாலையில் 10 இடங்களில் மண்சரிவு

அந்தியூர் - பர்கூர் மலைப்பாதை சாலையில் 10 இடங்களில் மண்சரிவு
X

அந்தியூர் - பர்கூர் மலைப்பாதை சாலையில் உருண்டு விழுந்த சிறிய அளவிலான பாறையையும், மழை வெள்ளத்தால் சாலை சேதமடைந்து இருப்பதையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் மலைப்பாதை சாலையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

அந்தியூர் - பர்கூர் மலைப்பாதை சாலையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் (20ம் தேதி) இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால், அந்தியூர்-பர்கூர் செல்லும் மலைப்பாதை சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், ஆங்காங்கே என மொத்தம் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. சிறிய அளவில் இருந்த பாறை சாலையில் உருண்டு விழுந்தது. மேலும், ஒரு சில இடங்களில், மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு சாலையோர பகுதி சேதமடைந்தது.

இந்த நிலையில் சிறிய அளவிலான பாறையை அகற்றினால் தான் போக்குவரத்து அங்கு நடைபெறும் என்ற சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வந்த நெடுஞ்சாலைத்துறையினர், சாலையில் இடையூறு எதுவுமின்றி, மண் சரிவுகளை அகற்றி சரி செய்தனர்.

இதனிடையே, நேற்று (21ம் தேதி) காலை 6 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வாகனங்களும், பர்கூரில் இருந்து அந்தியூர் வரக்கூடிய வாகனங்களும் மெதுவாக சென்றன.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!