ஈரோடு மாவட்டத்தில் இன்று 2வது நாளாக நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2வது நாளாக நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு
X

டி.என்.பாளையம் வனப்பகுதியில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்.

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2வது நாளாக நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2வது நாளாக நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் நீர்பரப்பில் வாழும் பறவைகள், நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், நீர்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 27, 28ம் தேதிகளில் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் நேற்றும் (மார்ச் 2), இன்றும் (மார்ச் 3) நடத்தப்பட்டன.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனுார் ஆகிய 3 வனக்கோட்டங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 49 இடங்களில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றும் (2ம் தேதி), இன்றும் (3ம் தேதி) என இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதேபோல், டி .என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடம்பூர் கிழக்கு, துர்கம், விளாங்கோம்பை, பங்களாப்புதூர் மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய 5 காவல் சுற்றுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

நேற்று மாலை 3 மணிமுதல் 6 மணி வரையிலும், இன்று காலை 6 மணி 10 வரையிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. ஒவ்வொரு கணக்கெடுப்பு பகுதிக்கும் இரண்டு தன்னார்வலர்கள் வனப்பணியாளர்களுடன் கலந்து இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் முடிவை வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதில் அரிய வகை பறவைகள் தென்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business