ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சியை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர், இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு நிறுவனமான, ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் "கொலு பொம்மைகள் கண்காட்சி" மற்றும் விற்பனை 27.09.2023 முதல் 25.10.2023 வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் காகிதக் கூழ் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட லெட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்க்கை, மகாபாரதம், தட்சிணாமூர்த்தி, லெட்சுமிநாராயணன், தசாவதாரம், அஷ்டலெட்சுமி, மீனாட்சிகல்யாணம், ஸ்ரீநிவாசகல்யாணம், கஜலெட்சுமி, கிருஷ்ணன், தேர், சக்கரத்தாழ்வார், நின்ற கருடன், அனுமன் சேவை, கோவை அனுமன், ஆடிப்பூரம் அம்மன், வைதீஸ்வரன் கோவில், அத்தி வரதர், ராமானுஜர், காஞ்சி மகாபெரியவர், சப்தகன்னிகள், காகிதக்கூழால் செய்யப்பட்ட 2 அடி உயரம் கொண்ட சென்னை காபாலீஸ்வரர், காளிகாம்பாள், 2 அடி தபசு காமாட்சி, 2 அடி கருமாரி அம்மன், 2 அடி வாஸ்து லட்சுமி பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, 2 அடி திருச்செந்துர் முருகன், 2 அடி கமாலாம்பாள், பஞ்சபூத ஸ்தலங்கள் செட், அஷ்ட பைரவர் செட், அறுபடை வீடு செட், கைலாச பர்வதம் செட், ஜோதிர் லிங்கம் செட், கிரிவலம் செட், 18 சித்தர்கள் செட், நவகிரங்கள் செட், சங்கீத மும்மூத்திகள், ஐயப்பன் பூஜை, கிராமிய பெண்கள் செட், துளசி மாடம், ராமர் சேது பாலம், குகன் ஓடம், அனுமன் சஞ்சீவி மலை, கீதா உபதேசம், பழனிமலைசெட், கல்யாண செட், பள்ளிக்கூடம் செட், திருப்பதி, விஸ்வரூபம் செட், சீமந்தம் செட், கும்பகர்ணன் செட், பிரதோஷ சிவன், பெருமாள் தயார், தன்வந்திரி, மூகாம்பிகை, வராகியம்மன், விவசாயம் செட், ராகவேந்திரர், தலைவர்கள், ஜல்லிக்கட்டு, பசுவும்கன்றும், குபேரர், மீராபாய், கோபியர் செட், ஆதிசங்கரர், காய்கறிகள், பழங்கள் செட், திருமண வரவேற்பு செட், மரச்சொப்பு செட், மரபாச்சி பொம்மைகள், மற்றும் பலவித கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன.
இக்கண்காட்சியில் ரூ.100 முதல் 20 ஆயிரம் வரையிலான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது சமயம் அனைத்து கடன், பற்று அட்டைகள் மற்றும் யுபிஐ எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்ற கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சரவணன், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu