ஈரோடு மாவட்ட க்ரைம்: 2 குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்ட க்ரைம்: 2 குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
X

க்ரைம் செய்திகள் (பைல் படம்).

2 குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை:-

திருப்பூர் மாவட்டம், தண்ணீர்பந்தல், 14 சின்னமுத்தூரை சேர்ந்த ரத்தினசாமி- தங்கமணி தம்பதியின் மகள் சசிகலா (26). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியை சேர்ந்த முனியப்பன் என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது பெற்றோருடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சசிகலா உயிரிழந்தார். இது குறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மது விற்ற முதியவர் கைது:-

அறச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டுவலசு பகுதியில் உள்ள முள்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக அறச்சலூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், சட்டவிரோதமாக மதுபாட்டிகளை பதுக்கி விற்பனை செய்து வந்த அவல்பூந்துறை பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (72) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2,210 மதிப்பிலான 17 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்