குளிக்க ருசிக்க; கொடிவேரி அணை சுற்றுலாத்தலம் - சிறப்பு தொகுப்பு

குளிக்க ருசிக்க; கொடிவேரி அணை சுற்றுலாத்தலம் - சிறப்பு தொகுப்பு
X

கொடிவேரி அணை சுற்றுலாத்தலம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுற்றுலாத்தலத்தின் சிறப்புகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுற்றுலாத்தலத்தின் சிறப்பு தொகுப்பை கட்டுரையாக இங்கு காணலாம்.

ஈரோட்டில் இருந்து 50 கிமீ தூரத்திலும், கோயமுத்தூரில் இருந்து 70கிமீ தூரத்திலும், சத்தியமங்கலத்தில் இருந்து 8 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள இந்த கொடிவேரி அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான அணையாகும். தடுப்புகளுடன் அமைக்கப்பட்ட தடுப்பணை, பரிசல் பயணம், மீன் பிடிப்பது, அணைக்குள் நீச்சல், குழந்தைகள் பூங்கா, ஊற்றுகளில் குளியல், சுடச்சுட மீன்குழம்பு சாப்பாடு என இந்த இடத்தில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. ஒரு நாளில் சுற்றிப் பார்க்க இது ஒரு அட்டகாசமான இடமாகும். இந்த அழகான இடத்தைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் பெரிய கொடிவேரி என்னும் ஊரில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.1125ம் ஆண்டில் கொங்காளுவன் என்ற மன்னரால் பவானி ஆற்றின் மீது 25,000 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்குவதற்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 898 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான அணையாகும். முதல் இடத்தில் இருப்பது கல்லணை என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. நீங்கள் இதனைக் கண்ட உடனே எப்படி நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தடுப்பணைகளுடன் கூடிய இந்த அமைப்பை உருவாக்கியிருப்பாரகள் என்று நாம் வியப்பில் ஆழ்வது உறுதி.


1125ம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் ஜெயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. கொடிவேரியில் பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலருந்து 10 கி.மீ வடக்கே உள்ள கல்கடம்பூரில் (கம்பத்ராயன் மலையில்) இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சி பெற்ற மக்கள் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப் பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற்பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தர விட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடியும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம்.


மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், பண்ணாரி அம்மனும் நஞ்சுண்டேஷ்வரரும் நான் அவ்விடம் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ அங்கே வர மாட்டோம் என்று சொல்கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடிவேரி அணை. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது.


அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரக்கன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன. கூடுதலாக, அணையின் அடிவாரத்தில் கட்டப்பட்ட ஒரு பூங்கா பார்வையாளர்களுக்கான பல இடங்கள், சவாரிகள் மற்றும் விளையாட்டுகளைக் கொண்டுள்ளது. அணையின் மறுகரையில் இருந்து ஓடும் ஆற்று நீரால் உருவாக்கப்பட்ட சிறிய நீர்வீழ்ச்சி கண்களுக்கு முற்றிலும் மகிழ்ச்சி அளிக்கிறது.


குறிப்பாக கனமாக இல்லாததால், குமிழ், பாயும் நீர் மெதுவாக பூமியில் விழுகிறது. நீர்வீழ்ச்சியில் நீராடுவது பாதுகாப்பானது, அதே காரணத்திற்காக நீங்கள் இங்கு நீந்தலாம், அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். புதிதாக பிடிபட்ட மீன்களும் விற்கப்படுகின்றன. எனவே, நீங்கள் விரும்பினால் புதிதாக சமைத்த மீனையும் இங்கே அனுபவிக்கலாம். நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.5 மட்டுமே. அரசு ஒதுக்கிய கார் பார்க்கிங் ரூ.20க்கும், தனியார் கார் பார்க்கிங் ரூ.30க்கும் உள்ளது. அணையின் மேல் பகுதியில், ஒரு சுற்றுப்பயணத்திற்கு, ஒரு நபருக்கு, 50 ரூபாய்க்கு, படகு சவாரி வழங்கப்படுகிறது.


மேலும், உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நீண்ட காலமாக எங்காவது கம்மி பட்ஜெட்டில் வெளியே சென்று வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிரிக்கிறீர்களா.! அப்படியானால் ஈரோடு மற்றும் கோயமுத்தூர் வாசிகளுக்கு இது ஒரு சரியான சாய்ஸ். மதிய சாப்பாடு, பரிசல், நுழைவுக்கட்டணம் எல்லாம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.100 இருந்தால் போதும். இந்த இடத்தில் அழகாக பரிசலில் சென்று, குளித்து மகிழ்ந்து விட்டு, மீன் குழம்புடன் சாப்பாடு ஒரு பிடி பிடித்துவிட்டு வரலாம்.

Tags

Next Story