நசியனூர் கருப்பண்ணசுவாமி, அண்ணமார் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா

நசியனூர் கருப்பண்ணசுவாமி, அண்ணமார் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா
X

Erode news- கும்பாபிஷேக விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கருப்பண்ணசுவாமி, அண்ணமார் சுவாமிகள் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Erode news, Erode news today- நசியனூர் அருகே உள்ள கருப்பண்ணசுவாமி, அண்ணமார் சுவாமிகள் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் நசியனூர் அருகே உள்ள கந்தம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது செல்வ விநாயகர், கருப்பண்ணசுவாமி, அண்ணமார் சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கிராம சாந்தியுடன் தொடங்கிய இவ்விழா 28ம் தேதி (புதன்கிழமை) மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காவிரிக்கு சென்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது 29ம் தேதி (வியாழக்கிழமை) இரண்டாம் கால யாக பூஜைகள் மூன்றாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை செல்வ விநாயகர், கருப்பண்ணசுவாமி, அண்ணமார் சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை மகா அபிஷேகம் தரிசனம் மகாதீப ஆராதனைகள் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கந்தாம்பாளையம் மற்றும் நாலு வள்ளக்காடு குலதெய்வ காணியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்‌. விழாவையொட்டி கிராமத்து மக்கள் பெருந்திரளாக வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story
ai solutions for small business