அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வர முதன் முதலாக யோசித்தது கருணாநிதி: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வர முதன் முதலாக யோசித்தது கருணாநிதி: அமைச்சர் முத்துசாமி
X

Erode News- பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், ஆட்சியர்கள் ராஜ கோபால் சுன்கரா, கிராந்திகுமார் பாடி, கிறிஸ்து ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

Erode News- அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வர முதன் முதலாக யோசித்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Erode News, Erode News Today- அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வர முதன் முதலாக யோசித்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, ஈரோடு. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகள் நீர் நிரம்பும் வகையில் ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையம் 1-இல் நடைபெற்ற காணொலிக் காட்சி நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

அத்திகடவு-அவிநாசி திட்டத்தை பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விவசாயிகள் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் பவானி அடுத்த காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய மூன்று மோட்டார் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பைப் லைன் போடப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், இந்த மூன்று முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 2023 முடிவடைந்தது. ஆனால் பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை.

தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது. நேற்று (16ம் தேதி) ஆயிரம் கன அடி வந்தது. இன்று (17ம் தேதி) அது குறைந்தது. காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் கால்வாய் இருந்து 1.5 டிஎம்சி மொத்தம் உள்ள ஆறு நீரேற்று நிலையங்கள் மூலம் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் உள்ள 1,045 குளங்களுக்கும் அனுப்பப்படும். முக்கிய பைப் லைன் எட்டு அடி விட்டம் உள்ளது. அது 105 கிலோமீட்டர் உள்ளது.

இதை தவிர குளங்களுக்கு செல்லும் பீடர் லைன் சுமார் ஆயிரத்து 65 கிலோ மீட்டர் உள்ளது. நாங்கள் சோதனை செய்தபோது சில இடங்களில் பழுதடைந்து இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரி செய்தோம். கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வரும் கசிவு நீர் 10 அல்லது 15 நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும்.

இதை தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது இங்கிருந்து நீர் 1,045 குளங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மொத்தமுள்ள 1,045 குளங்களில் 1020 குளங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒரு சில இடங்களில் பைப் லைனில் பழுது உள்ளதால் அங்கு தண்ணீர் செல்லவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு விடும்.

கீழ்பவானி கால்வாயில் இருந்து பத்து அல்லது 15 தினங்களில் உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு இங்கிருந்து 1.5 டிஎம்சி நீர் 1045 குளங்களிலும் நிரப்பப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் இதை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம்.

அண்ணாமலை போராட்டம் அறிவித்த காரணத்தால் தான், இன்று தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது என்பது மிகவும் தவறு. அப்படி இல்லை. தண்ணீர் வந்ததால் தான் திறக்கப்பட்டு இருக்கிறது. உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தை துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. ஒரு தடை ஏற்பட்டிருக்கும். அப்போது அரசை அண்ணாமலை குறை சொல்வார். எனவே, தான் திமுக அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளது. இந்த அரசு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். அவர்களிடம் பேசி நிலத்தை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கென்று தனி அரசாணை வெளியிடப்படும். இன்னும் சில தினங்களில், அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு விடும். மற்ற திட்டத்தைப் போல், இல்லாமல் இத்திட்டத்தில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் எந்த கட்டடம் கட்டக்கூடாது பயிர்கள் செய்யக்கூடாது என்று மட்டும் நிபந்தனை விதிக்கப்பட்ட நிலத்தை தான் திட்டத்திற்காக பயன்படுத்துகிறோம். இத்திட்டத்துக்கு, முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம். அதுமட்டுமல்ல, இப்படி ஒரு கொண்டு வர யோசித்ததே முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. இதே நான் அரசியலுக்காக சொல்லவில்லை. அது இயற்கையாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

ஒப்பந்ததாரர் லாசன் ட்யூப்ரோ நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு திட்டத்தை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். சில குளங்கள் விடுபட்டுள்ளன. அந்த குளங்களுக்கு திட்டத்தின் மூலம் நீர் வழங்கும் வாய்ப்பு இல்லை. இப்போது, வரும் தண்ணீரை கொண்டு 1,045 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். விடுபட்ட குளங்களுக்கு என்றால் தனியாக திட்டம் போட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இத்திட்டத்தினை ஒவ்வொரு நாளும் கண்காணித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனவே, தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஈரோடு, திருப்பூர். கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியர்கள் ராஜ கோபால் சுன்கரா (ஈரோடு), கிராந்திக்குமார் பாடி (கோவை), கிறிஸ்துராஜ் (திருப்பூர்), ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தலைமைப்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கோயம்புத்தூர் மண்டலம் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் (சிறப்புத் திட்ட வட்டம், அவிநாசி,) திருமலைக்குமார், திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கோபி கள்ளிப்பட்டி மணி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் மற்றும் பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!