ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா

ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா
X

அமைச்சர் முத்துசாமி சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்று (சனிக்கிழமை) திமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக வீட்டு வசதி வாரியத்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான முத்துசாமி சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஈரோடு மாநகர் திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், முன்னாள் எம்பி கந்தசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சந்திரகுமார், திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரகாஷ், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் செல்லப்பொன்னி மனோகரன் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!