ஈரோட்டில் கனி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா..!

ஈரோட்டில் கனி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா..!
X

ஈரோட்டில் நடைபெற்ற நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஈரோட்டில் நேற்று (12ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஈரோட்டில் நேற்று (12ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா ஈரோட்டில் உள்ள ரத்னா ரெசிடென்சியில் நேற்று (12ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேர்தல் பணிக்குழு தலைவர் சாதிக் பாட்சா தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு நிர்வாகி பிரபு வரவேற்புரை ஆற்றினார்.


சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பழனிச்சாமி, 3வது மண்டல தலைவர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், கனி வணிகர்கள் சங்கத்தின் புதிய தலைவராக சுப்பிரமணியம், செயலாளராக சாதிக் பாட்சா, பொருளாளராக கார்த்திக், துணை தலைவர் மற்றும் செயலாளராக சுரேஷ், சரவணன் ஆகியோர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில் உறுதிமொழி வசித்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.


இவ்விழாவில், மாநகராட்சி 40வது வார்டு உறுப்பினர் ரமேஷ்குமார், 7வது வார்டு உறுப்பினர் முத்து பாவா, தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் இராமச்சந்திரன், வணிகர் சங்க பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் நெல்லை ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாநகரச் செயலாளர் பாலமுருகன், காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், தேர்தல் பணிக்குழு நிர்வாகி ஜியாவுதின் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!