பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: கமல்ஹாசன் அறை கூவல்..!

பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: கமல்ஹாசன் அறை கூவல்..!
X

ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. எங்களை விட மிகக் குறைந்த வரியை செலுத்தக் கூடிய ஆளும் மாநிலங்களுக்கு எல்லா நலத் திட்டங்களையும் அளிக்கும் நீங்கள் (பாஜகவினர்) தமிழகத்தை மட்டும் ஏன் வஞ்சிக்கிறீர்கள்? வரி செலுத்துவதை பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால் நான் சரியாக வரியை செலுத்துபவன். அது தேசியக் கடமை என்று கருதுபவன் நான்.

அன்றைக்கு நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களை பார்த்து எதற்கு வரி, கிஸ்தி செலுத்த வேண்டும் என்று கட்டபொம்மன் கேட்டார். இன்றைக்கு நாம் அப்படி கேட்க முடியாது. இது என்னுடைய நாடு, என்னுடைய ஆட்சி. இந்த நாட்டிற்காக நான் வரியை கட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த வரிப் பணம் எங்கு போகிறது? யார் யாருக்கோ போகிறது.

வடநாட்டில் இருந்து இங்கு எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் வருவதாக நீங்கள் பதறுகிறீர்கள். அங்கு வேலையே கிடையாது. அதனால் இவ்வளவு தூரம் பயணித்து வேலைவாய்ப்பு பெறுவதற்காக இங்கு வருகிறார்கள். நாங்கள் இரண்டு லட்சம் வேலை தருவதாக சொன்னாரே மத்திய தலைவர் தந்தார்களா ? என்று அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. இதைச் சொன்னவர் அண்ணாதுரை என்பது ஒரு தலைமுறைக்குத் தெரியாது. அண்ணாதுரை கூறிய நிலைமை இங்கு வர வேண்டும் என்றால் திமுக கூட்டணிக்கு தான் உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். உங்கள் வாக்குகளை எதிரணிக்கு செலுத்தி விரயம் செய்து விடாதீர்கள். நாடு பிடிப்பதையே வியாபாரமாக செய்து வருபவர்கள் பாஜகவினர்.

அவர்களைப் பொறுத்த வரையிலும் எதிரணியினர் வென்றால் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் உடையவர்கள் தான் பாஜகவினர். எது வீரம்? நாடு காப்பது வீரமா? நாடு பிடிப்பது வீரமா? அதை மக்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள். இங்கே குழுமி இருக்கும் வீரர்களே நீங்கள்தான் நாடு காக்கும் வீரர்கள் என்பதை மறக்க வேண்டாம். எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லை என்றால் நல்லவன் கூட கெட்டுவிடுவான்.

இவர்கள் நல்லவர்களும் அல்ல. இவர்களை கேள்வி கேட்கும் பொறுப்பு மக்களாகிய உங்களுடையது. ஒரு காலத்தில் நம் நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கிடைத்ததை எல்லாம் சுருட்டிச் சென்றனர். அவர்களை காந்தி என்ற ஒரு கிழவனார் தான் ஒரே கட்டையை வைத்து. அடுத்து விரட்டினார். அவருக்கு துணையாக அம்பேத்கரும் நேதாஜியும் இருந்தார்கள் இவர்கள் கருத்து வெவ்வேறானதாக இருந்தாலும் நோக்கம் அவர்களை விரட்டி அடிப்பதாகத்தான் இருந்தது.

அதேபோல. தான் இன்று இவர்களை (பாஜகவினரை) விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!