/* */

காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
X

Erode news- காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

Erode news, Erode news today- பவானி அருகே காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்காயன்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மாநாட்டு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், சங்கத் தலைவர் சி.ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்கச் செயலாளர் எம்.சரவணகுமார் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் துணைத் தலைவர் எச்.ஞானராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் எம்.குழந்தை ராஜன் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட செயலாளர் பொ.இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் , மாநில துணைத்தலைவர் பி.திருமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் வேலா பி.எஸ்.சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் எஸ்கேஎம் பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர பொருளாளர் ஏ.ஆர்.சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர் .

இக்கூட்டத்தில், மதுரையில் நடைபெற இருக்கும் 41வது வணிகர் தின மாநாடு குறித்து விளக்கயுரை ஆற்றப்பட்டது. இதில், பவானி வட்டார பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் பவானி நகர அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கச் துணைச் செயலாளர் பூபதி ராஜா நன்றியுரை ஆற்றினார்.

Updated On: 29 April 2024 1:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  5. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்