காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்
Erode news- காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு முன், பின் எடுக்கப்பட்ட படங்கள்.
Erode news, Erode news today- காலிங்கராயன் வாய்க்காலில் தூர்வாரும் பணி பள்ளிபாளையம் முதல் காரவாய்க்கால் வரை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 740 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து, காலிங்கராயன் வாய்க்கால் பிரிந்து செல்கின்றது. இந்த வாய்க்காலானது, ஈரோடு ஊஞ்சலூர் மற்றும் கொடுமுடி வழியாக 56 மைல் 5 பர்லாங் 330 அடி (91 கி.மீ) தூரம் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கின்றது. இந்த வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றது. இப்பாசன நிலங்களில் நெல், மஞ்சள், வாழை மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி, ஈரோடு வட்டம், காலிங்கராயன் வாய்க்காலில் தூர்வாரும் பணி பள்ளிபாளையம் முதல் காரவாய்க்கால் வரை நடைபெற்று வருகின்றது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவசாயிகள் எளிதாக நீர்பாசன வசதி கிடைப்பதால விளைச்சல் அதிகரித்து பெருமளவில் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu