மகளிர் உரிமைத் தொகை: அந்தியூர் தொகுதியில் நாளை விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்

மகளிர் உரிமைத் தொகை: அந்தியூர் தொகுதியில் நாளை விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்
X

அந்தியூர் தொகுதியில் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாம்: வெங்கடாசலம் எம்எல்ஏ அறிக்கை.

அந்தியூர் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அந்தியூர் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நாளை (27.02.2024) செவ்வாய் கிழமை காலை 10 முதல் 1 மணி வரை கலைஞர் மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்கள் பெற்றிட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் அரசு அறிவித்த தகுதி இருந்தும் கிடைக்க பெறாதவர்கள் ஆவணங்களின் நகலை வழங்கி பயனடையலாம். குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், மகளிர் உரிமைத்தொகை பதிவுச்சீட்டு ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் தற்போதைய முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை அளித்து பயன் பெறலாம்.

முகாம் விபரம்:- அந்தியூர் பேரூராட்சி - பேரூராட்சி மன்ற அலுவலகம், அத்தாணி பேரூராட்சி - பேரூராட்சி மன்ற அலுவலகம், பச்சாம்பாளையம் ஊராட்சி - அண்ணாமடுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கெட்டிசமுத்திரம் ஊராட்சி - கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், பிரம்மதேசம் ஊராட்சி - பிரம்மதேசம்புதூரில் உள்ள சண்முக மஹால், கீழ்வாணி மற்றும் மூங்கில்பட்டி ஊராட்சி - இந்திராநகரில் உள்ள சமுதாய கூட்டத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

அதேபோல், மைக்கேல்பாளையம் ஊராட்சி - பொய்யேரிக்கரையில் ஊராட்சி மன்ற அலுவலகம், சின்னதம்பிபாளையம் ஊராட்சி - நகலூர் பிரிவில் உள்ள வாரி மஹால் கூத்தம்பூண்டி ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், சங்கராபாளையம் ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், எண்ணமங்கலம் ஊராட்சி - ஆலயங்கரடு சமுதாய கூடம், வேம்பத்தி ஊராட்சி - அம்மன் கோவில் தம்பிக்கலை இல்லம், குப்பாண்டாம்பாளையம் ஊராட்சி - மாரியம்மன் கோவில் அருகில், நகலூர் ஊராட்சி - குண்டுபுளியமரம் நியாய விலைக் கடை, சவூண்டப்பூர் ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

மேலும், அம்மாபாளையம் ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், மேவாணி ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், பெருந்தலையூர் ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், சந்திராபுரம் ஊராட்சி - ஊராட்சி மன்ற அலுவலகம், பொலவக்காளிபாளையம் ஊராட்சி - தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில், கடுக்காம்பாளையம் ஊராட்சி - கிராம நிர்வாக அலுவலகம், கூகலூர் பேரூராட்சி - பேரூராட்சி மன்ற அலுவலகம், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி - பேரூராட்சி மன்ற அலுவலகத்திலும் முகாம் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!