கத்தி முனையில் 22 பவுன் நகைகள், ரூ.1.80 லட்சம் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம்

கத்தி முனையில் 22 பவுன் நகைகள், ரூ.1.80 லட்சம் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம்
X

வீட்டில் இருந்த பீரோவில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

சித்தோடு அருகே மின்வாரிய பொறியாளர் வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் மிரட்டி 22 பவுன் நகை மற்றும் ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது.

பவானி அடுத்த சித்தோடு அருகே மின்வாரிய பொறியாளர் வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் மிரட்டி 22 பவுன் நகை மற்றும் ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (59). ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு சசி, கார்த்திகா என 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு தனது மருமகனை கோவில்பட்டி செல்வதற்காக சித்தோடு நால்ரோட்டில் சென்று இறக்கி விட்டு ஜெகநாதன் வீடு திரும்பினார். அப்போது, இவரது வீட்டின் முன்பாக பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்த போது, மறைந்து இருந்த முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் மதில் சுவரின் மீது ஏறி வீட்டுக்குள் நுழைந்து ஜெகநாதனின் கழுத்தில் அந்த கும்பல் கத்தியை வைத்தனர். பின்னர், அவரது மனைவி யசோதாவின் கத்தி வைத்து மிரட்டி பணம், நகைகளை தருமாறு மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, அவரிடம் பீரோ சாவி வாங்கி அதில் இருந்த தாலிக்கொடி -5 பவுன் செயின் -2 பவுன்,வளையல் 31/2 பவுன்,மகளுடைய - 2 பவுன் செயின்,வளையல் 1 பவுன்,வளையல் காப்பு இரண்டு -4 பவுன் டாலர் செயின் -4 பவுன் தேடு-1/2 பவுன் என மொத்தம் 22 பவுன் நகைகள், ரூ.1.80 லட்சம் பணத்தையும் கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் தப்பி சென்றது. தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, ஜெகநாதன் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் பைக்கில் வந்து சென்றது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், தம்பதிகளை கத்தியை காட்டி மிரட்டி கை மற்றும் பணத்தை திருடிச் சென்றது சித்தோடு மக்களை அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil